வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி அனுமதி
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் ஹஷான் குணதிலக்க ஆகியோரை 90 நாட்களுக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதியளித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கடந்த 18ஆம் திகதி அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் நடத்திய எதிர்ப்பு நடவடிக்கையின் போது வசந்த முதலிகே உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி அனுமதி
அவர்களில் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் தவிர்ந்த ஏனைய 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஒருவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரும் முதலில் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பாதுகாப்பு அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளதால் அவர்கள் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK