மஹிந்த ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்


அமைதிப் போராட்டம் நடத்தியவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்ததற்கு அமெரிக்க தூதுவர் ஜுலி சங் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். இது தொடர்பாக தனது டுவிட்டர் செய்தியில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு இது ஒரு வழிமுறை அல்ல. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அனைவருக்கும் தனது கவலையை தெரிவித்துள்ள அமெரிக்க தூதுவர், இலங்கை மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்

Comments