முன்னாள் பிரதமர் மஹிந்தவிடம் சிஐடி விசாரணை



முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று மாலை CID வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அலரி மாளிகைக்கு முன்னால் நடந்த வன்முறைகள், காலிமுகத்திடல் வன்முறைகள் தொடர்பாக சிஐடியினர் விசாரணை நடத்தியதாக தெரியவருகிறது.


ஆனால், இந்த விசாரணை எங்கு நடத்தப்பட்டது? எத்தனை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது? போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Comments