அதிகார போதை தலைக்கேரிய ராஜபக்சக்களின் அராஜகம் ஆரம்பம்.



ராஜபக்சக்கள் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்கள் என நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.அதுவே இன்று நடந்துள்ளது.

நாட்டில் இன்று எரிபொருள், கேஸ், மருந்து பால்மா என ஒன்றுமே இல்லை.இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதே ஆட்சியாளர்களின் கடமை. ஆனால் ராஜபக்சக்கள் தமது அதிகாரத்தை எவ்வாறு தக்க வைக்கலாம் என்றே சிந்திக்கின்றனர்.

இன்று ராஜபக்சக்களின் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் இலங்கை ஜனநாயகத்தில் விழுந்த கரும்புள்ளி.

இவ்வாறான தாக்குதல்கள் இலங்கையை மீண்டும் ஜூலை கலவரத்துக்கு கொண்டு செல்லும்.


ஆகவே எமது நாட்டை பொருளாதாரத்திலும் அரசியல் ரீதியிலும் படுகுழியில் தள்ளியுள்ள ராஜபக்சக்களை நாம் விரட்டும் வரை எமது போராட்டம் தொடர வேண்டும்.

அந்த போராட்டங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியாக நாம் என்றும் துணை நிற்போம்.

Comments