IMF கடன்கள் எங்களை வந்தடைய சுமார் ஆறு மாதங்கள் ஆகும் ஜி.எல். பீரிஸ்

இலங்கை எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக மேலதிகமாக 500 மில்லியன் டொலர் நிதி உதவியை இந்தியா வழங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.

அத்துடன் பங்களாதேஷுக்கு வழங்க வேண்டிய 450 மில்லியன் டொலர்களை ஒத்திவைக்க அந்நாடு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

"சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் (IMF) எங்களை வந்தடைய சுமார் ஆறு மாதங்கள் ஆகும், அது தவணை முறையில் கிடைக்கும்" என்று பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.



Comments