அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையெழுத்து திரட்டும் பணிகள் ஆரம்பம்


அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வரும் முயற்சியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளது.

 ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான மனுவில் கையொப்பம் பெற்றுள்ளார்கள் என்று கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

 இதுதொடர்பாக, திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், நமது  FLASH NEWS  இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்தார்.

   நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கான கையெழுத்து திரட்டும் பணி இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இரண்டொரு தினங்களில் அந்த பிரேரணையை சபாநாயகரிடம் நாங்கள் கையளிப்போம்.

 இந்தப் பிரேரணை மூலம் பல அரசியல் கட்சிகளின் உண்மையான வடிவத்தை மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று அவர் எம்மிடம் தெரிவித்தார்.

Comments