றம்புக்கனை காவல்துறை பிாிவில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு அமுல்


றம்புக்கனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை காவல்துறை ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிவித்தலில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காவல்துறை ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் வசிப்பவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள காவல்துறை பேச்சாளர், றம்புக்கனை பகுதியூடாக பயணிப்பவர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் கோரியுள்ளார்.

Comments