இன்று மாலைக்குள் புதிய அமைச்சரவை - FLASH NEWS - TAMIL


இன்று மாலைக்குள் புதிய அமைச்சரவை

அமைச்சரவை அமைச்சர்கள் சகலரும் இராஜினாமா செய்திருப்பது, ஜனாதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், இன்று மாலைக்குள் புதிய அமைச்சரவை  அமைச்சரவை பதவியேற்க வேண்டும்.

ஜனாதிபதி கட்சிகளுக்கு விடுத்துள்ள  அழைப்பும் இந்த அவசரத்தை காட்டுகிறது. அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை நேற்றிரவு பிரதமரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இதனையடுத்து, அமைச்சரவை இராஜினாமாக்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இன்று மாலையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாகவும் அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன




No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.