முஷரப், ரகுமான், அலி சப்ரி: மூவர் மீதும் விசாரணைகளை முன்னெடுக்க கட்சி அதிஉயர் பீடம் தீர்மானம்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் முஷரப் முது நபீன் , புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ஏ  ரகுமான் ஆகிய மூவரையும் நேரடியாக விசாரிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர்பீடம் தீர்மானித்துள்ளது.

கட்சியின் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் மீறி  அரசாங்கத்துக்கு ஆதரவாக இவர்கள் மூவரும் செயல்படுவதற்கு எதிராக  கட்சி விளக்கம் கோரியது.

இதற்கு,அவர்கள் வழங்கிய எழுத்து மூலம் விளக்கத்தில் திருப்தி இல்லாததால், இவர்கள் மூவரையும் நேரடியாக விசாரிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளது.

    இதற்கமைய, அடுத்த மாதம் நான்காம் ஐந்தாம் மற்றும் 9ஆம் திகதிகளில் ஏதாவது ஒரு தினத்தில் கட்சித் தலைமையகத்துக்கு வந்து தங்களது விசாரணைகளை

 எதிர்கொண்டு விளக்கங்களை தருமாறு  கட்சி  அதி உயர் பீடம்  தீர்மானித்திருக்கிறது.

Comments