தகவல் வழங்கினால் பொது மக்களுக்கு பணப்பரிசு - பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு
போதை பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்கும் பொது மக்களுக்கு பணப்பரிசு வழங்குவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கினால் பணப்பரிசு வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு குற்ற விசாரணை பிரிவினால் தொடர்ந்தும் போதை பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாத்திரம் நூற்றுக்கும் அதிகமான போதை பொருள் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான பல்வேறு சுற்றிவளைப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK