தம்புள்ளையில் மகன் மற்றும் மகளுக்கு நஞ்சூட்டிய தாய்!


தம்புள்ளை- யாபாகம பகுதியில் தாய்  ஒருவர் தனது ஒரு வயது மகன் மற்றும் மூன்று வயது மகளுக்கு விஷம் கொடுத்து அவரும் பருகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த விஷத்தை உட்கொண்ட தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் நேற்று (15) தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பிள்ளைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தம்புள்ளை-யாபாகம பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்த அந்த பெண்ணின் கணவர் தம்புள்ளை பொருளாதார மையத்தில் வாடகை வாகன ஓட்டுநராக இருந்துள்ளார் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

இருவருக்குமிடையில் முரண்பாடுகள் நிலவி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அவர் தனது மகன் மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்து தானும் பருகியுள்ளதுடன், மூவரும் சாலையோரத்தில் விழுந்து இருந்த நிலையில் பிரதேசவாசிகளால் மருத்துவமனையில் அனுமதித்துக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சையளிக்கப்பட்டு முடிந்த பின் குறித்த தாய் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments