தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர் திடீர் மரணம் - ஜனாஸா கட்டாய தகனம்!
பொகவந்தலாவ தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றுக்குள்ளான 78 வயதுடைய இருவரின் தந்தை 07 ஆம் திகதி காலை இறந்துள்ளார்.
உயிரிழந்த நபர் நவலப்பிட்டி பொலிஸ் பிரிவில் ஹபுகஸ்தலவாவில் வசிக்கும் எம்.முபாரக் மற்றும் இருவரின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்கான இவர் கடந்த 29 ஆம் திகதி காலை பொகவந்தலாவ மோரா தோட்டத்திலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது உடல்நிலை மோசமடைந்து 27 ஆம் திகதி காலை டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளார்.
குறித்த நபர் பல வேறு நோய்வாய்ப்பட்டிருந்தாகவும், கொரோனா காரணமாக உக்கிரமடைந்து இறந்துள்ளராக டிக்கோயா ஆதார மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இருவரின் தந்தையின் இறுதி சடங்குகளை செய்ய உறவினர்கள் மறுத்ததால், அரசாங்கத்தின் செலவில் தகனம் செய்யப்பட்டது என்று டிக்கோயா ஆதார மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் கலன லோகுஹேவா தெரிவித்தார்.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK