முஸ்லிம் எம்.பிக்களை சந்திக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் - FLASH NEWS - TAMIL


முஸ்லிம் எம்.பிக்களை சந்திக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்


இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கையிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று (24) புதன்கிழமை சந்திக்கவுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் இறுதியிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு தொடர்பில் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இன்று காலை அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அறிவித்துள்ளது.

குறித்த சந்திப்பு இன்று பி.ப 2.30 மணியளவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் பிரதமருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு முன்னர் இரத்துச் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தனது முகநூல் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார் 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.