வரலாற்றில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களில் தற்போதைய அரசாங்கமே தோல்வியானது - அனுரகுமார திஸாநாயக்க - FLASH NEWS - TAMIL


வரலாற்றில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களில் தற்போதைய அரசாங்கமே தோல்வியானது - அனுரகுமார திஸாநாயக்க


அண்மைய வரலாற்றில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களில் மிகவும் தோல்வியான அரசாங்கம் தற்போதைய அரசாங்கம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

குறுகிய காலத்தில் இந்தளவுக்கு பலவீனமான நிலைமைக்கு சென்ற எந்த அரசாங்கமும் இருக்கவில்லை. தற்போதைய அரசாங்கம் எந்த வகையிலும் வெற்றியான அரசாங்கமல்ல.

பொருளாதாரம் மற்றும் சட்டத்துறையில் அரசாங்கம் தோல்வியடைந்து முடிந்துள்ளது.நாட்டின் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்க தயாராக இருக்கின்றனர்.

அதற்கு மக்கள் விடுதலை முன்னணி தலைமையேற்க தயாராக உள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.