கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இனவாத இராஜ்ஜிம் உருவாகியுள்ளது! - மனோ கணேசன் - FLASH NEWS - TAMIL


கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இனவாத இராஜ்ஜிம் உருவாகியுள்ளது! - மனோ கணேசன்

கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இனவாத இராஜ்ஜிம் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்னால் இன்று பேரணியில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழரும், முஸ்லிம்களும் இந்த தேசத்தில் வாழ்வதற்கான உரிமை கொண்டவர்கள். வரலாற்றில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்பதற்கான குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டு இருக்கின்றது.

தமிழர்களையும், முஸ்லிம்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு கோட்டாபய அரசாங்கம் இனவாத இராஜ்ஜியத்தை உருவாக்கி கொண்டு இருக்கிறது.

இது கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த அடக்குமுறைக்கு எதிராக முஸ்லிம்களும், தமிழர்களும் அணி திரண்டு இருக்கின்றார்கள் என கூறியுள்ளார்






No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.