இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக எச்சரித்த பிரதமர் மஹிந்த
பொதுஜன பெரமுன கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமகால அரசியல் செயற்பாடுகளில் இளம் உறுப்பினர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பிரதமர் கடும் தொனியில் எச்சரித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நேற்றைய தினம் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் வழங்கிய ஆதரவினை கருத்திற் கொண்டு அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும். மேலும் குழுவின் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும். ஒற்றுமை மிகவும் முக்கியம். பிரிவினை ஏற்பட்டால் பாரிய அழிவு ஏற்படும்.
எனது 50 வருட அரசியல் வாழ்க்கை அனுபவத்தில் இந்த விடயத்தை நான் உங்களுக்கு கூறுகின்றேன்.
அமைச்சர் விமல் வீரவன்ச தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் ஆளும் கட்சியின் இளம் உறுப்பினர்களை பிரதமர் கடுமையான எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK