பாகிஸ்தான் பிரதமருடனான சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து! - ஹக்கீம், ரிஷாத் விசனம்
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் மாத்திரமே சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
ஹக்கீம் எம்.பி., ரிஷாத் எம்.பி. ஆகியோருடனான சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரை அண்மையில் சந்தித்து, இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது பாகிஸ்தான் பிரதமரைச் சந்திப்பதற்கு நேரம் கோரியிருந்தனர். இதன்படி குறுகிய நேரத்தை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த சந்திப்பு நடைபெறாது என பாகிஸ்தான் தூதுவரால், மேற்படி இரு தலைவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சந்திப்பு இரத்துக்கான காரணம் வெளியாகாத போதிலும், அரச உயர்மட்டத்திலிருந்து அவிடுக்கப்பட்ட அழுத்தத்தால் அவ்வாறு நடந்திருக்ககூடும் என நம்பப்படுகின்றது.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK