சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் மாவனெல்லை யுவதி கைது - FLASH NEWS - TAMIL


சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் மாவனெல்லை யுவதி கைது


ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹரான் காசிமிடம் பயிற்சி பெற்றார் என்ற குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் இந்த யுவதி நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைதானவர், மாவனெல்லையை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சஹரான் காசிமிடம் பயிற்சி பெற்றதாக கூறப்படும் 06 பெண்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் தற்போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.