ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு வழங்க தயார்! - கர்தினால் மெல்கம் ரஞ்சித்


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு வழங்க தயார் என பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். எனினும் இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் நபர்களை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெற்ற திருப்பலி பூஜையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்த தகவலை அறிந்து கொண்டால், தாக்குதலின் பின்னணியில் சர்வதேச அமைப்புகள் எதுவும் இருக்கின்றவா என்பதை உறுதிப்படுத்த முடியும்.

நாடு மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த சர்வதேச அமைப்புகளின் தலையீடுகள் இருக்குமாயின் அதனை தடுக்க வேண்டும் எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

Tamil Win

Comments