இம்புல்கொட பிரதேசத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி!


இலங்கையில் மேலும் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் இம்புல்கொட பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Comments