கொரோனாவை கட்டுப்படுத்த, 250 மில்லியன் டொலர் நன்கொடையளித்தார் பில்கேட்ஸ்
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்காக, 250 மில்லியன் டொலர்களை (இலங்கை பெறுமதியில் சுமார் 4621 கோடி ரூபாய்) உலகப் பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் வழங்கியுள்ளார்.
‘பில் அன்ட் மெலிண்டா கேற்ஸ் அறக்கட்டளை’ ஊடாக (Bill & Melinda Gates Foundation) இந்த நன்கொடையினை பில்கேட்ஸ் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மைக்ரோசொஃப்டின் ஸ்தாபகர் பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘உலகின் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகளில் உதவுவதற்காக, 250 மில்லியன் டொலர்கள் நன்கொடை அளிக்கப்படவுள்ளதாக’ தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நன்கொடையின் ஒரு பகுதி, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆபிரிக்க நாடுகளில் கொரோனா தடுப்பூசி விநியோகிப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK