அமைச்சர்களாக சரத் வீரசேகர, சமல் ராஜபக்ஷ பதவியேற்பு - FLASH NEWS - TAMIL


அமைச்சர்களாக சரத் வீரசேகர, சமல் ராஜபக்ஷ பதவியேற்பு

புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஆகியோர் இன்று (26) ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் பதவியேற்றுள்ளனர்.

உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியாகும்.

அதேநேரம், இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பு, உள்விவகாரம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.