20 பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம் - FLASH NEWS - TAMIL


20 பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்


20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளை பெற்று பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.