QR முறையில் பாரிய மோசடி ; ஆறு இலட்சம் கியூ.ஆர் குறியீடுகள் தவறான முறையில் உருவாக்கப்பட்டுள்ளன - FLASH NEWS - TAMIL


QR முறையில் பாரிய மோசடி ; ஆறு இலட்சம் கியூ.ஆர் குறியீடுகள் தவறான முறையில் உருவாக்கப்பட்டுள்ளன


 புதிய எரிபொருள் கியூ. ஆர் குறியீடுகளை மோசடிகளுக்காக உருவாக்கியமை தொடர்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு அளித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.


இந்த விடயம் தொடர்பில் ஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவிக்கையில்,

முறைமையில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே நாளில், தனிநபர்கள் சிலர் அதனைப் பயன்படுத்தி மற்றவர்களின் வாகனங்களுக்காக அங்கீகரிக்கப்படாத கியூ. ஆர் குறியீடுகளை உருவாக்கியுள்ளனர்.

ஒரே நாளில் சுமார் 600,000 புதிய கியூ. ஆர் குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிக்கல்களுக்கு மத்தியிலும், கியூ. ஆர் குறியீடு முறையிலான எரிபொருள் விநியோகம் வெற்றிகரமாகத் தொடர்வதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலையில் இரட்டை எண்கள் (Even digits) அல்லது பூச்சியத்தில் (0) முடியும் இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே வெள்ளிக்கிழமை (20) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.