பொலிஸ் பௌத்த மற்றும் மத விவகார சங்கத்தின் இப்தார் நிகழ்வு
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் இஸ்லாமிய உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு, 2026 மார்ச் 12 ஆம் திகதி மாலை கொள்ளுப்பிட்டியிலுள்ள Marino Beach ஹோட்டலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பொலிஸ் பௌத்த மற்றும் மத விவகார சங்கத்தின் அனுசரணையுடன் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்) ரவி செனவிரத்ன, பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அத்தோடு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 400 இஸ்லாமிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த விசேட இப்தார் நிகழ்வில் பங்கேற்றனர்.











Post a Comment