எரிபொருள் விநியோகம் வழமைபோன்று தொடரும்! - FLASH NEWS - TAMIL


எரிபொருள் விநியோகம் வழமைபோன்று தொடரும்!


எரிபொருள் விநியோகப் பணிகள் தடையின்றித் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

 

நாளைய தினமும் (02) வழமை போன்று எரிபொருள் விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இன்று (01) விடுமுறை தினமாக இருந்தபோதிலும், ஊழியர்களின் அர்ப்பணிப்புடன் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தலைவர் தெரிவித்தார்.

 

அதற்கமைய, இன்று மாலை 5.00 மணி வரை 1,332,311 லீற்றர் டீசலும், 2,019,600 லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக டி.ஜே. ராஜகருணா சுட்டிக்காட்டினார்.

 

அதேவேளை, வீடுகளில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தி வைப்பது சட்டவிரோதமான செயற்பாடு எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

 

இதன்காரணமாக, அவ்வாறான நபர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.