குஷ், ஹஷீஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது - FLASH NEWS - TAMIL


குஷ், ஹஷீஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது



கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கிலோ கிராம் குஷ் மற்றும் ஹஷீஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடமிருந்து 6 கிலோ 590 கிராம் குஷ் மற்றும் 4 கிலோ 910 கிராம் ஹஷீஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.