மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை - FLASH NEWS - TAMIL


மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை


 இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை  அமைச்சு மத்திய கிழக்கில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இப்பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் சுமார் ஒரு மில்லியன் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு அரசாங்கத்தின் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது.

 

பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற  தன்மையைக் கருத்தில் கொண்டுமத்திய கிழக்கில் உள்ள இலங்கை குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள் மற்றும்:

 

·        நம்பகமான உள்ளூர் ஊடகங்கள் மற்றும் ஏற்பாடு செய்யும் நாட்டின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைக் கண்காணிக்கவும்.

 

·        அத்தியாவசியமற்ற பயணம் மற்றும் பாரியளவிலான பொதுக் கூட்டங்களைத் தவிர்க்கவும்.

 

·        அருகாமையிலுள்ள இலங்கை இராஜதந்திர தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும்.

 

·        எல்லா நேரங்களிலும் கைப்பேசிகளை முழுமையாக வலுவூட்டி வைத்திருக்கவும்செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்லவும்.

 

தேவைப்படும் இடங்களில் உதவி வழங்க பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களும் 24 மணிநேர அவசர முழுநேர சேவை தொடர்பிலக்கங்களை செயற்பாட்டில் ஈடுத்தியுள்ளன.

இலங்கையில் உள்ள குடும்பங்கள் தங்கள் உறவுகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள பின்வரும் பிரத்தியேக 24 மணி நேர அவசர தொடர்பு எண்களும் நிறுவப்பட்டுள்ளன:

 

·        கொன்சியூலர் பிரிவுவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு: +94742595546

 

·        இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE): +94719802822

 

·        முழுநேர சேவைத் தொடர்பிலக்கம்: 1989

 

அமைச்சு தொடர்ந்து நிலையமையைக் கண்காணித்துதேவைக்கேற்ப மேலதிக இற்றைப்படுத்தல்களை வெளியிடும்.

 

 

 

வெளிநாட்டு அலுவல்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு 

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.