சேவையின்போது மிரட்டல் அல்லது தாக்குதலுக்கு உட்பட்டால், அது குறித்து காவல்துறையில் முறையான புகார் அளிக்க வேண்டும். உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த PickMe உறுதியாக இருக்கின்றது, ஆனால் நீங்கள் காவல்துறையில் புகார் செய்யாவிட்டால், எங்களால் அந்தச் சம்பவத்திற்கான நடவடிக்கை எடுக்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

இத்தகைய சந்தர்ப்பங்களில் நீங்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறைகள்:

1. பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவும்: முதன்மையாக உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.விரைவாக பாதுகாப்பான இடத்திற்குச் சென்று அச்சத்திலிருந்து வெளிவாருங்கள்.  

2. காவல்துறையை உடனடியாக தொடர்பு கொள்ளவும்: தேசிய அவசர தொலைபேசி இலக்கம் (119) அழைக்கவும். அல்லது சம்பவம் நடந்த பகுதியின் காவல்துறை நிலையத்திற்குச் சென்று புகார் செய்யவும்.

3. காவல்துறை புகார் அளிக்கவும்: தாக்குதல் அல்லது மிரட்டல் நடந்த இடத்தின் காவல்துறை பிரிவில் முறைப்படி புகார் பதிவு செய்ய வேண்டும்.  

4. புகார் விவரங்களை எங்களுடன் பகிரவும்: உங்கள் புகார் பதிவு செய்த பிறகு, PickMe தொடர்பு மையத்துடன் (0114507507) தொடர்பு கொள்ளுங்கள் அல்லது அருகிலுள்ள PickMe அலுவலகத்திற்கு சென்று புகார் இலக்கம் அல்லது புகார் நகலை வழங்குங்கள்.

5. ஆதாரங்களை சேமிக்கவும்: சம்பவத்திற்கான ஆதாரங்களை (புகைப்படங்கள், வீடியோக்கள், சாட்சியாளர்களின் வாக்குமூலம்) சேமித்து வைக்கவும். இது விசாரணைக்குப் பயனுள்ளதாக இருக்கும்.  

6. PickMe ஆல் வழங்கப்படும் உதவி: நீங்கள் காவல்துறையில் புகார் அளித்தவுடன், PickMe உங்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கு தயாராக இருக்கும்.

7. சட்ட நடவடிக்கைகள்: தேவையான பட்சத்தில், மிரட்டல் அல்லது தாக்குதல் நடத்திய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

குறிப்பு:

காவல்துறை புகார் இல்லாமல், PickMe நிறுவனத்திற்கு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது. இதுபோன்ற புகார்களை PickMe மிகுந்த கவனத்துடன் கையாளும், மேலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.