கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவித்தல் - FLASH NEWS - TAMIL


கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவித்தல்

 


குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு சேவை பெறுவதற்காக பொதுமக்கள் நாளை (13) வருகைத் தருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த அவசர அறிவிப்பை விடுத்துள்ளது. 

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு இன்னும் சீர்செய்யப்படாமையினால், பொதுமக்கள் இந்த அறிவுறுத்தலை பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளனர். 

சாதாரண சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று வருகை தந்த விண்ணப்பதாரர்களுக்கு, திங்கட்கிழமை சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.