ரமழான் — கண்ணியத்தின் மாதமா? கையேந்தும் மாதமா? - FLASH NEWS - TAMIL

ரமழான் — கண்ணியத்தின் மாதமா? கையேந்தும் மாதமா?



அப்துல் அஸீஸின் முகநூலில் இருந்து 

ரமழான்…புண்ணியம் பூத்துக் குலுங்கும் மாதம்.அள்ளி அள்ளி கொடுக்கும் மனங்கள் மலரும் மாதம். ஆனால், இதே மாதத்தில் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் நிலையும் அதிகரிப்பதைப் பார்க்கும்போது உள்ளம் கனக்கிறது.

“இது எங்கேயோ தவறாகிப் போய்விட்டதோ?” என்ற கேள்வி மனதைத் துளைக்கிறது.

ரமழான் என்பது தெருத்தெருவாக பித்ரா கேட்டு அலைவது என்று எங்கேயும் கற்றுக் கொடுக்கப்படவில்லை.

இது கண்ணியத்தை காக்கும் மாதம்.

உதவி தேவைப்படுபவரை நாம் தேடி சென்று உதவ வேண்டும் என்பதே இதன் ஆன்மா

அவர்கள் வந்து கேட்க வேண்டிய நிலை உருவாக்குவது அல்ல.ஏனைய மாதங்களை விட இந்த மாதத்தில் மக்கள் அதிகமாக கையேந்தும் நிலை உருவாகியுள்ளது என்பது ஒரு சமூகச் சிந்தனைக்குரிய விஷயம்.

கொடுப்பது நம் கடமை;

ஆனால், கண்ணியத்தை காக்கும் வகையில் கொடுப்பதே ரமலானின் உண்மை அழகு.

என் இந்த எண்ணம் தவறாக இருந்தால் என்னை மன்னிக்கவும்.

ஆனால், ரமழானை கண்ணியத்தின் மாதமாகவே பார்க்க விரும்புகிறேன். நபியவர்கள் கொடுப்பதில் புயலாக இருந்தார்கள் என்பதை ஊண்டி சொல்வதில் பாவம் இருக்கிறதோ தெரியாது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.