முஸ்லிம் சமூகத்தின் முதுகெலும்பான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அக்கரைப்பற்றில் மாத்திரம் சுடுகாட்டின் சுடலஞான அச்சத்துடன் செயற்படுகிறதாம்.இதனால்.இங்கு இடுப்புடைந்து சப்பாணி நிலைக்குச் செல்லும் அபாயத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் வந்துள்ளது.கட்சியின் ஊருக்கான பொறுப்பை ஏற்றுள்ளவரின் அண்மைக்கால போக்குகள்,சமூக விடுதலைபாடிகளை விரக்திக்குள்ளாக்கியுள்ளது.நீ
தேசிய காங்கிரஸுடன் இவர் ஏற்படுத்தியுள்ள உறவால்,அக்கரையூரின் மு.கா ஆதவரளார்கள் மட்டுமன்றி தேசிய காங்கிரஸின் அபிமானிகளும் முகம் சுழிக்கத் தொடங்கியுள்ளனர்.சொந்த வட்டாரத்தையே வெல்ல முடியாதென்ற தத்துவத்தில்,வேறு வித்துவம் காட்டி மாநாகர சபையை அலங்கரிக்கும் இவரது அழகு அவலட்சணமாகவே பார்க்கப்படுகிறது.
இதனால் இவ்வூரின் மூத்த மற்றும் சிரேஷ்ட கட்சி உறுப்பிர்களும் அமைப்பாளருடனான தொடர்பிலிருந்து தூரமாகியுள்ளனர்.குடும்பச் சொத்தாக அக்கரைப்பற்றுக்குள் கட்சியை சொந்தங் கொண்டாடும் இவரது குறுக்குப் போக்குகளைக் கட்டுப்படுத்துமாறு தாருஸ்ஸலாத்துக்கு தகவல்கள் விரைந்த வண்ணமே உள்ளன.அக்கரைப்பற்றில் எவரை அமைப்பாளராக நியமித்தாலும் 2500 வாக்குகளைத் தாண்ட முடியாதென்ற கள யதாரத்தம் பல தேர்தல்களில் நிரூபணமானதை அவதானித்துள்ள கட்சி தலைமையகம் வேறு முடிவுக்கும் வரலாம்.மாநகர சபை உறுப்புரிமையை சுழற்சி முறையில் பகிர்ந்தளிக்குமாறு விடுக்கப்படும் தொடர்ச்சியான வேண்டுதல்களை கவனத்தில் கொள்ளும் நிலையும் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.மத்திய குழுக்கூட்டம்,மாதாந்த கலந்துரையாடல் மற்றும் சமூக செயற்பாடுகள் தொடர்பான எவ்வித கலந்துரையாடல்களும் இவரது தலைமையில் இதுவரை நடைபெறவில்லை. இதனால்,சுடுகாட்டின் சுடலஞானம் ஆதரவாளர்களை அடிக்கடி அச்சுறுத்துகிறதாம்.

0 Comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK