78வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தி : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சுதந்திரம் என்பது வெறும் அரசியல் அதிகார மாற்றமல்ல; அது மக்கள் மத்தியில் நல்லிணக்கம், சமத்துவம், சமூக ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதை நிலைபெறுவதற்கான அடித்தளமாகும். அந்த அடிப்படையில், சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவம் உள்ளிட்ட அனைத்து இன, மத சமூகங்களும் ஒன்றிணைந்து வாழும் இலங்கையை கட்டியெழுப்புவதே இன்றைய தலைமுறையின் வரலாற்றுப் பொறுப்பாகும்.
தேச சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்களையும், போராட்டங்களில் பங்கெடுத்த அனைத்து சமூகங்களையும் இந்த நாளில் மரியாதையுடன் நினைவுகூருகிறோம். அவர்களின் தியாகங்கள், எம்மை பிளவுகளுக்குள் அல்ல, ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் தேசபக்தி என்ற உயரிய பாதையில் நடத்த வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகின்றன.
இன்றைய உலக புவிசார் அரசியல் சூழலில், இன, மத, மொழி வேறுபாடுகளை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவது நாட்டின் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்தாகும். அதனைத் தவிர்த்து, சமூக நீதியும் ஜனநாயக மதிப்பீடுகளும் நிலைபெறும் ஒரு நாட்டை உருவாக்குவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய காலகட்டம் இதுவாகும்.
.jpg)

Post a Comment