இலங்கையில், இரு புனிதஸ்தலங்களின் பாதுகாவலரின் அனுசரணையில் ஹிஜ்ரி- 1447 வருட இப்தார் திட்டம் அங்குரார்ப்பணம்..! - FLASH NEWS - TAMIL


இலங்கையில், இரு புனிதஸ்தலங்களின் பாதுகாவலரின் அனுசரணையில் ஹிஜ்ரி- 1447 வருட இப்தார் திட்டம் அங்குரார்ப்பணம்..!


கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு நேற்று (23) திங்கட்கிழமை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதியமைச்சர் முனீர் முலப்பர், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்-ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி உட்பட பல உலமாக்கள், பல்கலைக்கழக மற்றும் அரபுக் கல்லூரி விரிவுரையாளர்கள், புத்திஜீவிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது, இலங்கைக் குடியரசில் 1447 ஹிஜ்ரி ஆண்டிற்காக, சவூதி அரேபியாவின் இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாவலரின் அனுசரணையில் இந்த வருடம் முன்னெடுக்கப்படவுள்ள இப்தார் திட்டம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










மேலும், இந்தியாவின் புது டில்லியிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் இஸ்லாமிய விவகாரங்கள், தஃவா மற்றும் வழிகாட்டுதல் அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தும் மத இணைப்பாளரும் இந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டார்.



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.