ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மேலும் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பேருந்து விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கு வழிவகுத்த பல அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய விசாரணைகளை சம்பந்தப்பட்ட குழு முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க எடுக்கவேண்டி நடவடிக்கைகள் குறித்த யோசனைகளையும் சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அறுவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK