இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு - FLASH NEWS - TAMIL


இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina) அவர்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை பிப்ரவரி 4ம் திகதி அலரி மாளிகையில் சந்தித்தார்.  இச்சந்திப்பு  இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தியது. சந்திப்பின்போது இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

 கலந்துரையாடலின்போது கடந்த காலங்களில், குறிப்பாக இலங்கையின் மறுசீரமைப்பு திட்டத்திற்கும் உலக மற்றும் பிராந்திய சவால்களுக்கும் தீர்வு காணும் முயற்சிகள் தொடர்பாகவும், ஜப்பானின் ஆதரவு குறித்தும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.  கல்வியின் முக்கியத்துவம், குறிப்பாக பாடசாலை மட்டத்திலான தொழிற்பயிற்சிகள் தொடர்பாகவும் இக்கலந்துரையாடலின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலின்போது கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் பற்றியும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதுடன், வெளிப்படைத்தன்மையான ஆட்சி,  பொறுப்புக் கூறல் மற்றும்  சுற்றுச்சூழலை நிலையாகப் பேணுவதில் மக்களின் ஆதரவு என்பன தொடர்பாகவும் பிரதமர் இங்கு குறிப்பிட்டார். 

இக்கலந்துரையாடலுக்கு ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா (Akio Isomata) அவர்களுடன் ஜப்பானின் உயர்  அதிகாரிகள் குழுவினரும், இலங்கை சார்பாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்ரி உட்பட உயர் அதிகாரிகள் குழுவினரும் கலந்து கொண்டனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.