போப் பிரான்சிஸ் காலமானதாக 'vatican news' X தளத்தில் வெளியாகிதை போன்று பகிரப்படும் புகைப்படம் திரிபுப்படுத்தப்பட்ட புகைப்படம் ஆகும்.

கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையும் வத்திக்கான் நகரின் தலைவருமான போப் பிரான்சிஸ் காலமானதாக செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை  அவதானிக்க முடிந்தது.

சில நாட்களுக்கு முன்பு போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையிலேயே அவர் காலமானதாக செய்தி பகிரப்படுவதால் இது தொடர்பாக ஆராய்ந்ததில், அவர் காலமானதாக எந்தவொரு உத்தியோகபூர்வ செய்திகளும் இதுவரை வெளியாகவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. மேலும் “அவர் இரட்டை நிமோனியாவுடன் போராடிக் கொண்டிருக்கிறார்” என்றும் “தீவிர சிகிச்சையில் உள்ளார்” என்றும் இன்று வெளியாகிய சில சர்வதேச செய்திகளில் குறிப்பிட்டிருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.