மத்திய ஆபிரிக்க நாடான சாவோ டோம் மற்றும் பிரின்சிப்பிற்கு (São Tomé and Príncipe) மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பியுள்ளது. இது உலகளாவிய தெற்கிற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

வெளியுறவு அமைச்சின் கூற்றுப்படி, இந்த உதவியில் உயிர்காக்கும் மருந்து வகைகள், இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் மொனிட்டர்கள் மற்றும் ஸ்ட்ரிப்கள் போன்ற அத்தியாவசிய மருந்துகள், உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் இதில் அடங்கும்.

“உலகளாவிய தெற்கிற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இன்சுலின், இரத்த குளுக்கோஸ் மொனிட்டர்கள் மற்றும் ஸ்ட்ரிப்கள் போன்ற உயிர்காக்கும் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை உள்ளடக்கிய மருத்துவப் பொருட்களின் மனிதாபிமான உதவி சாவோ டோம் மற்றும் பிரின்சிப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த உதவி சாவோ டோம் மற்றும் பிரின்சிப்பிற்கு பொது சுகாதார சேவைகளை வலுப்படுத்த உதவும்,” என்று வெளியுறவு அமைச்சு தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது