அமெரிக்க இராணுவத்தை மறுசீரமைப்பதற்கான நிறைவேற்று உத்தரவுகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையொப்பமிட்டார்.

நாஜி ஆட்சியிலிருந்து அவுஷ்விட்ஸ் கைதிகள் முகாம் விடுவிக்கப்பட்டு 80 ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் போலந்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு டொனால்ட் ட்ரம்ப் இவற்றில் கையொப்பமிட்டுள்ளார்.

இதனிடையே, கொரோனோ தடுப்பூசியைப் பெற மறுத்தமைக்காக இராணுவத்திலிருந்து அகற்றப்பட்ட எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பணியில் இணைத்துள்ளார்.

அமெரிக்க இராணுவத்தின் ஆயுதப் படைகளின் பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்தைப் பாதுகாக்க டொனால்ட் ட்ரம்ப் பல இராணுவ சட்டங்களையும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இவ்விழாவில் தெரிவித்ததுள்ளார்.