கொழும்பில் உள்ள லேக் ஹவுஸ் நிறுவன கட்டிடத்தில் இன்று (11) அதிகாலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்பாக உள்ள பாதுகாப்பு வேலி பலத்த சேதமடைந்த போதிலும் சாரதிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்