களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழப்பு
களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பல்கலைக்கழக விடுதியின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழகின் சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர விடுதியில் இன்று (23) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களனி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment