அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தபால் வாக்கு செலுத்தியதாக அறிவித்துள்ளார்.


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார். தற்போது, தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, “ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ். அமெரிக்கா அவரது தலைமையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் காண தயாராக இருக்கிறது” என்று கூறி வருகிறார்