எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது.


தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 180 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 357 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.


நேற்று முன்தினம் (22) மட்டும் 57 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.