லிட்ரோ தலைவர் இராஜினாமா - FLASH NEWS - TAMIL


லிட்ரோ தலைவர் இராஜினாமா


லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நாளை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதித பீரிஸ் 2022 ஜூன் 13 அன்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக பணியாற்றத் தொடங்கினார்.

எரிவாயு கொள்வனவு தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக அப்போதைய தலைவர் இராஜினாமா செய்ததையடுத்து முதித பீரிஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

முதித பீரிஸ் இதற்கு முன்னர் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.