அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் விபத்தில் சிக்கியுள்ளது. கருவலகஸ்வெவ பிரதேசத்தில் இந்த  விபத்து நேர்ந்துள்ளது.

திடீரென வீதிக்கு வந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் -  காரின் மீது மோதாமல் இருக்க, காரின் சாரதி முயற்சித்தபோதே  கார் வீதியை விட்டு விலகிச் சென்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அம்பாரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுவிட்டு கொழும்பு திரும்பும் வழியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் எந்தவொரு சேதமும் இல்லை