அடுத்த ஜனாதிபதித் தேர்தலே இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கும் – வெளிவிவகார அமைச்சர் - FLASH NEWS - TAMIL


அடுத்த ஜனாதிபதித் தேர்தலே இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கும் – வெளிவிவகார அமைச்சர்


நாட்டை மீட்டெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வந்துள்ளமை தொடர்பில் சர்வதேச சமூகம் மத்தியில் சிறந்த கௌரவம் காணப்படுகின்றது. எவரும் எதிர்பாராத வேகத்தில் நாம் அதைச் செய்துள்ளோம். இது பற்றி அறிய பலரும் ஆர்வமாக உள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு இது நடக்குமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகின்றது.

நாட்டை மீட்டெடுத்த தலைவர்தான் ரணில் விக்கிரமசிங்க. எனவே, நிலையானதொரு பொருளாதாரத்தை ஏற்படுத்த அவருக்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலே இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கும். எனவே, உணர்வு அரசியலுக்குப் பதிலாக வேலைத்திட்டங்கள் உடைய அரசியலுக்கே ஆதரவு வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.