எனது தந்தையை கொல்ல வந்த கொலையாளி தற்போது அனுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் மேடையில் இருக்கிறார் ; ஹிருணிகா குற்றச்சாட்டு.
கலவர நேரத்தில் தனது தந்தையை கொல்ல வந்த கொலையாளி தற்போது அனுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் மேடையில் இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றம் சாட்டியுள்ளார்.
அப்போது ஜே.வி.பியினரால் மக்கள் கட்சியைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாகவும், அதன்போது தனது தந்தையும் மக்கள் கட்சியில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலையாளிகள் வந்து தன்னை சுட முற்பட்டபோது, கொலையாளிகளுடன் தனது தந்தை சண்டையிட்டு கொலையாளிகளின் துப்பாக்கியால் கொலையாளியை சுட்டுக் கொன்றதாகவும் அவர் கூறினார்.
அன்று என் தந்தையை கொலை செய்ய வந்த பிரதான நபர் .இன்று அனுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் மேடையில் இருப்பதாகத் தெரிவித்த அவர், விரைவில் அந்தப் பெயர்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
சமகி ஜன பலவேகய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
.jpeg)
Post a Comment