கொழும்பு விபுலானந்தா வித்தியாலயத்தின் கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு ! - FLASH NEWS - TAMIL


கொழும்பு விபுலானந்தா வித்தியாலயத்தின் கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு !

விநாயகமூர்த்தி ஜனகனினால் நன்கொடையும் வழங்கி வைப்பு 

கொழும்பு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின்  கல்வி பொது தராதர  சாதாரண  தர  மாணவர்களுக்கான  கருத்தரங்கு   பாடசாலையின்  அதிபர்  என். ரவிச்சந்திரன்  தலைமையில் இடம்பெற்றது.  

இந்த நிகழ்வில் ஐ.டி.எம் நேசன் கெம்பஸ் மற்றும் ஜனனம் அறக்கட்டளையின்  ஸ்தாபகருமான கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகன் பிரதம அதிதியாக  கலந்து கொண்டதுடன்,கௌரவ அதிதியாக அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் வண பிதா சந்ரு பெர்னாண்டோ கலந்து கொண்டிருந்தார். 

அதேவேளை  மாணவர்களின்  கல்வியை  மேம்படுத்தும் நோக்கில்  சாதாரண  தர  மாணவர்களுக்கான கருத்தரங்கை  நடாத்துவதற்கான  அன்பளிப்பொன்றும் கலாநிதி  விநாயகமூர்த்தி ஜனகனால் வழங்கி வைக்கப்பட்டமை விசேட  அம்சமாகும்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி  ஜனகன் , பாடசாலைகட்டட  சுவர்ப்பூச்சிற்கான நிதியை நன்கொடையாக வழங்கவுள்ளதாகவும்  உறுதியளித்தார்.  

இந்த நிகழ்வின் போது  கலாநிதி  விநாயக  மூர்த்தி  ஜனகனுக்கு நினைவுச்சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.








No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.