ஐ.தே.க. முன்னாள் பெண் உறுப்பினரின் வீட்டில் திருட்டு - FLASH NEWS - TAMIL


ஐ.தே.க. முன்னாள் பெண் உறுப்பினரின் வீட்டில் திருட்டு



மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி பெண் உறுப்பினர் ஒருவரின் வீடு உடைத்து தங்க ஆபரணம், புகைபடகருவி, பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற சம்பவம் திங்கட்கிழமை (11) அதிகாலை 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பெண் உறுப்பினர் வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பிள்ளைகளுடன் வீட்டின் அறையில் உறங்கி கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவதினமான அதிகாலை 2.30 மணிக்கு வீட்டின் சமையலறையின் யன்னலை கழற்றி உள்நுழைந்த திருடன் அறையில் அலுமாரியில் வைத்திருந்த 43 இலட்சத்து 7,333 ரூபா பெறுமதியான 27 பவுண்கள் கொண்ட தங்க ஆபரணங்கள், 3 இலச்சது 17 ஆயிரம் ரூபா பணம், 6 இலட்சம் ரூபா பெறுமதியான புகைபடகருவி என்பன திருடப்பட்டுள்ளன.

பெண் உறுப்பினர் கண்விழித்த போது திருடனை கண்டுள்ளதாகவும், ஆனால் அவரால் படுக்கையில் இருந்து எழும்ப முடியாதவாறு இருந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸார் தடயவியல் பிரிவினரை அழைத்து விசாணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை குறித்த மாநகர சபை உறுப்பினரின் வீடு உடைப்பதற்கு முன்னர் அவரின் வீட்டிற்கு அருகிலுள்ள இரு வீடுகளின் யன்னலை உடைத்து திருடர்கள் நுழைந்துள்ளதாகவும் எதுவிதமான பொருட்களை திருடிச் செல்லவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.