தாய்நாட்டின் ஆள்புலத்துக்கு அரணாகச் செயற்படுவது அவசியம்
ஏகாதிபத்தியவாதிகளின் பிடியிலிருந்து நம்நாடு மீண்டு இன்றுடன் 76
வருடங்களாகின்றன.பிரித்தானியாவின் ராஜதந்திரங்களால் நமது நாட்டு வளங்கள் மலிமாக மட்டுமன்றி சுயநலத்துக்காகவும் பாவிக்கப்பட்டது.நாம் பெற்ற சுதந்திரம் அந்நிய கலாசாரங்களின் திணிப்பிலிரு ந்தும் நம்மை பாதுகாத்தது.இன்று சகல சமூகத்தினரும் தங்களது அடையாளங்களுடன் வாழக் கிடைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது.எமது நாட்டின் எதிர்காலம் சுதந்திரத் தின் யதார்த்தங்களை புரிந்து வாழ்வதில்தானுள்ளது.
இலங்கையில் வாழும் நாம்,ஒரு தாய் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து 76 வருடங்களுக்கு முன்னர் பெற்ற சுதந்திரத்தை பெறுமதியானதாக்குவோம்.பிரிந்து அல்லது பிளவுபட்டு நமது தாய் நாட்டின் ஆள்புலமைக்கு ஆபத்து ஏற்படாது பாதுகாக்க இந்த நாளில் உறுதிபூணுவோம்.நாடு பெற்ற சுதந்திரம் நம்மை வாழ வைக்கும் என்ற நம்பிக்கையில்,பணிகளை முன்னெடுப்போம்.
எம்.என்.எம்.ஷாம் நவாஸ்.
தேசிய தலைவர்-
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாழிப முன்னணிகளின் சம்மேளனம்
.jpg)
Post a Comment